Breaking News
நாமலை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜூலி!
ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்.
நாமலை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜூலி!
பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங்.
நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற புதிய பொறுப்பில் அவரது அரசியல் ஈடுபாடுகள், இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.