காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையான குண்டு வீச்சு. காசாவின் எல்லைப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொர்போன் பல்கலைக்கழகத்தில் - காசா விற்கு ஆதரவாக மாணவர்கள் ஒர் விரிவுரை மண்டபத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
7.jpeg)
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 11 பேர் நேற்று கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையான குண்டு வீச்சுகளை மேற்கொண்டு வருகின்றது காசாவின் எல்லைப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 11 பேர் நேற்று கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இஸ்ரேல் அரசு பொது மக்களை மனிதாபிமான பகுதிகளுக்கு செல்லும்படி கேட்டிருந்த போதும் பொதுமக்கள் செல்லும் பாதைகளில் இஸ்ரேலின் கனரக டாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எகிப்து -காசா எல்லை பகுதியில் பாரிய அளவு அகதிகள் குவிந்துள்ளனர்.
அதே வேலை இஸ்ரேல் கமாஸ்மீது ராஜதந்திர அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றது .எகிப்தில் கெய்ரோவில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு இஸ்லாமிய அமைப்பு தனது பச்சை கொடியை காட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .இதே வேளை அனைத்து தரப்பினரும் பேச்சு வார்த்தை மேசை க்கு வர தயாராக உள்ளதாக எகிப்தின் அல் கேமரா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் செல்லும் இரு பகுதிகளை இஸ்ரேல் மூடியதை ஏற்றுக் கொள்ள முடியாது என வெள்ளை மாளிகை கடுமையாக கண்டிப்பதாக அதன் பேச்சாளர் கிறீன் ஜோன் பியர் தெரிவித்து உள்ளார்.
பிரான்சில் சொர்போன் பல்கலைக்கழகத்தில் நூற்று கணக்கானோர் நடத்தும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை . கட்டுபடுத்தி வெளியேற்ற பொலிசார் தலையிட்டு உள்ளனர். காசா விற்கு ஆதரவாக மாணவர்கள் ஒர் விரிவுரை மண்டபத்தை ஆக்கிரமித்துள்ளனர்.