Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ! உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து திட்ட தீட்டி வருகிறது காங்கிரஸ்!

.

 

உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து கட்சியையும் இந்தியா கூட்டணி கட்சிகளுடனான உறவையும் வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து கட்சியையும் இந்தியா கூட்டணி கட்சிகளுடனான உறவையும் வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அதீத நம்பிக்கை வைத்த காங்கிரஸ் கட்சி உண்மையில் தோல்வியை தழுவியது. எனவே ஒரு காலகட்டத்தில் உபியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் அங்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக 2027ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி பல திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு படியாக இப்போது உபியில் கட்சியின் கட்டமைப்பை கலைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கடந்த 5ஆம் தேதி இரவு உத்தரபிரதேசத்தின் மொத்த கட்சியின் கட்டமைப்பையும் கலைத்தார். நடப்பு ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 80 இடங்களில் 43 தொகுதிகளை கைப்பற்றியது. எனவே, உபியில் அடுத்து 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது.இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய உபி மாநிலத்தின் மேலிடப்பொறுப்பாளர் அவிநாஸ் பாண்டே,”புதிய குழுக்கள் உபி மாநிலத்தின் கட்சி கட்டமைப்பை ஆராய்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்யும். கட்சியை மறுசீரமைக்கும் பணி முடிவடைய சிறிது காலம் ஆகும் என்பதால், இப்போது உள்ள நிர்வாகிகள் தற்காலிகமாக தொடர்வார்கள். வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு உபியில் சில உத்திகளை கையாண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு இப்போது உபியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன,”என்றார்.

அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 6 பிராந்திய செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பிராந்தியம் வாரியாக உள்ளூர் நிர்வாகிகள் தொண்டர்களிடம் விரிவாக ஆலோசனை மேற்கொள்வார்கள். இந்த ஆலோசனையின் போது மேற்கொள்ளப்படும் கருத்துகள் அடிப்படையில் கட்சியில் சீரமைப்பு பணிகள் நடைபெறும். இந்த ஆலோசனையின் அடிப்படையில் நிர்வாகிகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கட்சியின் மேலிடத்துக்கு அனுப்ப்படும். அதன்பின்னர் நிர்வாகிகள்