Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு மாய மான்

.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்காமல் அதனைத் தூக்கி வீசி விட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”மிகச் சொற்ப அளவிலான எண்ணிக்கையானவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்கி அதனை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியான முயற்சியிலே எங்களுடைய கட்சி ஈடுபட்டது கிடையாது. அதிலே எங்களது எந்தப் பங்களிப்பும் கிடையாது.

உதிரிகள் எல்லாம் சேர்ந்து பெரியதொரு திட்டத்தை வகுத்து இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆரம்பித்தபோதே எங்கள் கட்சியின் மத்திய செயற்குழுவினர் 5 தடவைகள் கூடி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கின்றோம்.

முதல் கூட்டத்திலேயே இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற அபாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனச் சொன்னோம். இறுதியிலே “இலங்கைத் தமிழரசுக் கட்சியை எப்படியும் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்” எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் அது முடியாமல்போன காரணத்தினாலே எங்களுடைய கட்சியில் இருந்தே ஒருவரைப் பிரித்தெடுத்து அவரைத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்னும் நாமம் சூட்டி முன்னிறுத்தியிருக்கின்றார்கள்.

அவருக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அவரிடத்தில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

எங்கள் கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கின்றோம். அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதோஇ தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற மாயமானுக்கு வாக்களிப்பதோ உங்களுடைய பொன்னான வாக்கை நீங்களே குழிதோண்டிப் புதைத்து வைக்கின்ற செயலாகவே இருக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.