Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் நிகழவிருக்கும் அதிசயம்! இரட்டை சூரிய உதயம்!

"இரட்டை சூரிய உதயம்" போல் தோன்றும்

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் சனிக்கிழமை (மார்ச் 29)  நிகழவுள்ளது.

இந்த  சூரிய கிரகணத்தின் போது ஒரு அரிய வான நிகழ்வை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் 

கடந்த ஏப்ரல் 8, 2024 அன்று ஏற்பட்டதை போல முழு சூரிய கிரகணம் இல்லாவிட்டாலும், இந்த சிறிய சூரிய கிரகணம் சூரியன் உதிக்கும் போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணத்தின் புள்ளி கனடாவின் கியூபெக்கின் நுனாவிக் பகுதியில் நிகழும் என்றும், அங்கு சூரிய உதயத்தின் போது  கிரகணம் தோன்றுவதை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட அமெரிக்காவிலும் இந்த நிகழ்வு சூரிய உதயத்தின் போது நிகழும். மேலும் நுனாவிக் முதல் கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் மைனே வரையிலான டெர்மினேட்டரில் உள்ள சில இடங்களில் கிரகணம் தோன்றுவதை காண முடியும்  ஆகையால், இது ஒரு "இரட்டை சூரிய உதயம்" போல் தோன்றும் என்று கூறப்படுகிறது.

இதனால், சில இடங்களில் "சூரிய கொம்புகள்" (Solar Horns) என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும். வடகிழக்கு அமெரிக்க மாநிலங்களில், குறிப்பாக மைனே, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மாசசூசெட்ஸ் மற்றும் கிழக்கு கனடாவில், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கில் சிறிய கிரகணத்துடனான  சூரிய உதயத்தைக் காணலாம்.