Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை தங்கள் ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டவாறு கொண்டு சென்ற இஸ்ரேலிய படையினர்.

.

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு கொண்டுசென்ற இஸ்ரேலிய படையினர் – வெளியானது அதிர்ச்சி வீடியோ.

ஜெனினில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் தங்கள் ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டவாறு கொண்டு சென்றதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது.

வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த காட்சியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.        தேடுதல் நடவடிக்கையின் போது காயமடைந்த சந்தேகநபரையே இவ்வாறு தங்கள் வாகனத்தில் கட்டிப்போட்டு கொண்டு சென்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அம்புலன்சை கொண்டுவருமாறு கேட்டவேளை இஸ்ரேலிய படையினர் அவரை ஜீப்பின் பொனட்டின் கட்டுப்போட்டு கொண்டு சென்றனர் என அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை இஸ்ரேலிய இராணுவத்தினர் சர்வதேச செம்பிறை சங்கத்திடம் கையளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முஜாகெட் அஜ்மி என்ற ஒருவரையே இஸ்ரேலிய படையினர் இவ்வாறு கொண்டு சென்றனர் அவர் எந்த அமைப்பையும் சேராதவர் என பொதுமக்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.