டிரம்பின் வெறுப்புக்குரிய 32 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பு !
.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் வெறுப்புக்குரிய விஷயங்களில் ஒன்றாகும்.
அதிபராக தனது முதல் பதவிக் காலத்தின் போது, மற்ற உறுப்பு நாடுகள் 'தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்' என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அச்சுறுத்தினார்.
தனது பங்கை செலுத்தாத ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அமெரிக்கா அதை பாதுகாக்காது என்றும் டிரம்ப் கூறினார்.
ஜனவரியின் (2025) தொடக்கத்தில், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 5% (முந்தைய இலக்கை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக) இதற்காக செலவழிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
நேட்டோவின் நோக்கம் மற்றும் பணியை 'அடிப்படையில் இருந்தே மறு மதிப்பீடு செய்வது' தான் டிரம்பின் குறிக்கோள் என்று அவரது பிரசார வலைத்தளம் விவரிக்கிறது.
நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.
ஆனால் வெளியேறாமல் கூட இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த அவருக்கு இன்னும் வழிகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதனை அவரால் சாதிக்க முடியும்.