Breaking News
யாழில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது!
,
யாழ். பலாலி அந்தோணிபுரம் பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பலாலி பொலிசரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.