Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

லொஹான் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்! பதிவு செய்யப்படாத வாகனம் மீட்பு.

.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட  சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிசம்பர் 2ஆம் திகதி வரையும் அவரது மனைவி நவம்பர் 22 வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

 சந்தேகநபர்களுக்கான பிணை கோரிக்கையை நிராகரித்த நுகேகொட நீதவான், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 2ஆம் திகதி வரையிலும், சந்தேகநபரான ஷஷி பிரபா ரத்வத்தவை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.