Breaking News
மார்க்சின் மாணவன் பெரியாரின் பேரன் நான்தான் - சீமான்!
.
மார்க்சின் மாணவன்,பெரியாரின் பேரன் நான்தான் சீமான் என்று
அனலடிக்க மேடைகளில் பேசத்தொடங்கிய சீமான்,
இன்று கடும் சொற்களில் பெரியாரை விமர்ச்சனம் செய்கிறார்.
திராவிட அரசியலில் பயணித்த தமிழ் உணர்வாளர்கள் பலரும் மெல்லமெல்ல இந்த நிலைக்கு கூடுதலாகவோ குறைவாகவோ வந்துள்ளதை காணமுடிகிறது.
ஈழப்போரில் திமுகவும் - திமுக சார்பு திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட நடத்தைகளும்,
அதன் பின் அதிகாரத்திற்கு வந்தபின் தமிழ்நாட்டின்
மொழி
பண்பாடு
வழிபாடு
தொழில்
வணிகம்
வேலைவாய்ப்பு
இயற்கைவளம்
இவற்றின் மீது திமுகவின் இரட்டைவேடமும் சுரண்டலும்,
இந்த தனது பிழைப்புவாதத்தை
" திராவிட மாடல்" என்று தம்பட்டம் அடித்ததும்,
அந்த தம்பட்டத்தை திராவிடத் தாங்கிகள் தாங்கி பரப்பியதும்
நியாயமான திராவிட எதிர்ப்பை தீவிரப்படுத்திவிட்டது.
திராவிட எதிர்ப்பென்பது
வினைக்கு எதிர்வினையே தவிர
முதல் வினையல்ல.
கலைஞர் கருணாநிதி பிழைப்புவாத அரசியல் நடத்திய போதும்,
தமிழைத் தாழ்த்தி திராவிடத்தை உயர்த்த துணியவில்லை.
பெரியார் சொன்னதாக
பாலியல் குறித்த சீமானின் கருத்து இப்போது ரசிக்கத்தக்கதல்ல.
அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
சீமான் ஆதாரம் தரட்டும்.
ஆனால்
இதற்கு ஆதாரம் கேட்பவர்கள், ஆதாரமுள்ள பெரியாரின் கருத்துகளுக்கும் நேர்மையாக பதில் சொல்லவேண்டும்.
அடுத்தவர் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று சட்டத்தில் உள்ளதை எடுத்துவிட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் போட்டது,
மனைவியோடு கலவி செய்வது குற்றம் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியகாரத்தனம் குடிப்பதை குற்றம் என்று சொல்வது என்று பெரியார் சொன்னது,
சிலப்பதிகாரத்தை தே.....யா காப்பியம் என்றது,
திருவள்ளுவரை ஆரியக் கைக்கூலி என்றது,
தமிழ்ச் சனியனை விட்டுத் தொலையுங்கள் என்றது,
தமிழாய்ந்த புலவர்களை சோற்றுக்கு அலைபவர்கள் என்றது,
மொழிவழி மாநிலம் கேட்பது இனத்துரோகம் என்றது,
அண்ணாவை........மகன் என்றது,
என்ற பெரியாரின் நிலைப்பாடுகளுக்கும் பெரியாரியர்கள் பதில் சொல்லவேண்டும்.
வரலாற்றின் குப்பை கூளங்களை கிளறி அந்த நாற்றத்தை ஆய்வு செய்வதைவிட , ஆபத்தான பல களங்களில் நிற்க வேண்டிய தேவை இப்போது தமிழர்களுக்கு இருக்கிறது.
ஆனால் நாற்றத்தை நறுமணம் என்று தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் நிருபிக்க முயலும்போது
இதுபோன்ற சம்பவங்களும் நடந்துவிடுகிறது.
முகநூல் பதிவு.