Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பு லி க ளி ன் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதம்.

அருள்நிலாவின் அப்பாவும், அவளின் அக்காவும் இனியொருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

“எங்களை கட்டியடைத்து முத்தமிட்டு பிரியும்போது நீங்கள் கூறிய பல அறிவுரைகளை நான் நிறைவேற்றியதாகவே நம்புகின்றேன். உங்களை மீண்டும் காணும்போது பல வெற்றிச்செய்திகளை உங்களிடம் கூற நான் காத்திருக்கின்றேன்.. விடுதலைப்பாடல்களை கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவு என்னை வாட்டுகின்றது. நீங்கள் எங்களுடன் வாழ்ந்த காலங்கள் மிக்குறைவு. குறைவான இந்த நாட்களிலேயே ஒரு அழகிய வாழ்வினை நாம் வாழ்ந்தோம். ஒற்றைக்காலுடன் நீங்கள் இருந்தாலும் ஒருபோதும் உங்கள் வேகம் குறைந்ததில்லை.உங்களை அப்பாகவாக பெற்றதில் நான் மிக பெருமையடைகின்றேன்.. நீங்களும், அக்காவும் எப்போது வருவீர்கள் அப்பா??”

பு லி க ளி ன் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதத்தின் சுருக்கமே இது.. அருள்நிலாவின் அப்பாவும், அவளின் அக்காவும் இனியொருபோதும் திரும்பிவரப்போவதில்லை. கற்பனைக்கப்பாற்பட்ட வீர, ஈக சம்பவங்களால் நிறைந்துபோயிருக்கும் தமிழர்களின் போராட்டவரலாற்றைப்போன்ற ஒன்றை இந்த பூமிப்பந்து இதுவரை கண்டதில்லை. இனியொருபோதும் இவ்வாறான நிகழ்வுகள் சாத்தியமேயில்லை.மகனை, மகளை, கணவனை, மனைவியினை ஆரத்தழுவி விடைபெற்று போர்க்களம் புகுந்த வீரபுருஷர்களால் நிறைந்தது தமிழினத்தின் போரியல் வரலாறு.  மகாபாரதம், இராமாயணம் போன்ற புரட்டு இதிகாசங்களை, இட்டுக்கட்டப்பட்ட காப்பியங்களை விஞ்சிய வீரவரலாறு எம் கண்முன்னே நாம் வாழ்த்த காலத்தில் நடந்தேறியிருக்கின்றது. அந்த வரலாறு எமை எழுச்சிகொள்ளச்செய்யும்.. எழுவோம் நாம்.