அனுரவின் பதவியேற்பு – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பது என்ன?
.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனுரகுமார திசநாயக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என கட்சி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பி;ற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பதவியேற்பிற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தனது கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இறுதி முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்த பின்னரே இது குறித்து தீர்மானிப்போம் என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் விதம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்கின்றது என தெரிவித்துள்ள அவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பொதுமக்கள் கரிசனைகொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்..