Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு!

.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதாக கூறி, நிதி மோசடி செயற்பாடு ஒன்று இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கள் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி வட்ஸ்அப் தொடர்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை தருவதாக கூறி இந்த நிதி மோசடி நடந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பணியகத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.