Breaking News
வாகன ஓட்டிகளைக் கண்காணித்து தானாக வழக்குப் பதிவு செய்ய ANPR தானியங்கிக் கேமராக்கள்.
.

உலகம் முழுக்க 2024ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025ம் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 2025புத்தாண்டு பிறந்து மக்கள் அதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். உலகின் மற்ற பகுதி மக்களும் புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகிவருகின்றனர்.சென்னையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், கொண்டாடுபவர்கள் பாதுகாப்பாகக் கொண்டாடவும் சென்னை மாநகர் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 19,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.