Breaking News
ஐடி சோதனையில் அம்பலமான தகவல்! ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்த இபிஎஸ் உறவினர் ராமலிங்கம்..
.
ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட கோவை, பெங்களூருவில் உள்ள அவருக்குத் தொடர்புடைய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும். என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சுப்பிரமணியம் வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமியும் தனது மகனுக்குப் பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட கோவை, பெங்களூருவில் உள்ள அவருக்குத் தொடர்புடைய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர்.