Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தபால்மூல வாக்காளர்களுக்கு ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு: விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்படுமென பரவும் தகவல் பொய்யானதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்போர் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான தகவல்களுக்கமைய செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இதேவேளை, உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர்ந்த வேறு இடங்களில் வாக்களிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

உரிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என்ற நியாயமான அச்சம் ஏற்படும் போது வேறு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்குமாறு கோர முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் பரவும் பொய்யான தகவல்களை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.