Breaking News
பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை!
.
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் படுகொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.
துண்டாக்கப்பட்ட உடலை பெட்டி ஒன்றில் அடைத்து வீசிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேறு எங்கேயோ கொலை செய்துவிட்டு துரைப்பாக்கத்தில் வீசி சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண் யார் என்பது குறித்து காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.