பலதும் பத்தும் :- 21,02,2025 - மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை.
.

- வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறைவழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் தெரிவித்துள்ளார். சிவனுக்காக கொண்டாடப்படும் முக்கிய தினமான மகா சிவராத்திரி பண்டிகை எதிர்வரும் புதன்கிழமை இரவு (மாசி 26) அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை (மாசி 27) வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேடவிடுமுறை வழங்கப்படுகின்றது. எனினும் அவ் விடுமுறைக்கு பதிலாக மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமை வகுப்புகளை நடத்த ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின்பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12இ000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், அதில் பலர் பத்துவருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் எனவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், நீண்ட காலமாக தூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பவர்களும் உள்ளடங்குவதாக அவர்தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சேவையில் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் அண்மையில்தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்டமுகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்அமைச்சு திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 260,000 இற்கும் அதிகமாக உள்ளதாக திட்டத்தின்செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகள் வழங்கப்படும் எனதெரிவித்திருந்த நிலையில்இ அதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறுசபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில்இ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது தொடர்பில்இன்று(21) நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவதுஇ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறுதொடர்ந்து தனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ததன் பின்னர்இ அது தொடர்பில்பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காகஇ பதில் பொலிஸ் மா அதிபருக்கு அக்கோரிக்கைகள்ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
- வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இன்று (21) மதியம் இடம்பெற்ற விபத்தில், பெண்ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார்தெரிவித்துள்ளனர். வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள்நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதிக்கு திரும்ப முற்பட்ட போது, நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில்திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.