தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகா் விசேட சந்திப்பு!
.
தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகா் சந்தோஸ் ஜாவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகரசபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் கலந்து கொண்டதோடு திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல்இ தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.