Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பணம் பதுக்கியிருந்தால் கொண்டுவர ராஜபக்‌ஷக்களின் பரம்பரை உதவும்

.

உகண்டா மற்றும் சீஷல்ஸ் போன்ற நாடுகளில் நாங்கள் மறைத்து வைத்திருப்பதாக கூறும் பணத்தை கொண்டுவருவதற்காக தமது முழு பரம்பரையும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்‌ஷக்களின் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருக்கின்றது என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை போன்று வெளிநாட்டில் பணம் இருந்தால் இங்கு வெளிநாட்டு நிதி உதவிகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளும் அவசியம் இருக்காது. வேண்டுமென்றால் சீசெல்ஸ், உகண்டா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை கூடிய விரைவில் இங்கு எடுத்து வர இந்த அரசாங்கத்திற்கு முடியுமாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். அப்படி கொண்டுவருவதற்காக எமது கட்சி மற்றும் பரம்பரையின் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றோம் என்றார்.