பாகிஸ்தானில் சனத்தொகை அதிகரிப்பு; தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி!
.
பாகிஸ்தானில் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் சனத்தொகை அதிகரிப்பினால் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
2017ஆம் ஆண்டில் 207.68 மில்லியனாக இருந்த அந்நாட்டு சனத்தொகை 2023ஆம் ஆண்டில் 241.49 மில்லியனாக அதிகரித்துள்ளமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமை தொடருமெனின், 2050ஆம் ஆண்டளவில் பாகிஸ்தானின் சனத்தொகை 400 மில்லியனை தாண்டும் என தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சனத்தொகை அதிகரிப்பு அவதானமான ஒரு நிலையை உருவாக்கும் எனவும் அந்நாட்டின் வளங்கள் குறைவடைய நேரடியாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, உணவு பாதுகாப்பு, சமூக மற்றும் பொருளாதார அடிப்படை தேவைகள், பொதுச் சொத்துக்களுக்கு விளைவு ஏற்படும் என கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.