Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யுத்தமற்ற இரவு குறித்து காசா மக்கள் - நிம்மதியாக உறங்கினோம்

,

2023 ஒக்டோபர் 7 ம் திகதி யுத்தம் ஆரம்பித்த பின்னர் முதல்தடவையாக நேற்றிரவு நிம்மதியாக உறங்கியதாக தெரிவித்துள்ள காசா மக்கள் தங்களால் இதனை நம்பமுடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

யுத்த ஆரம்பித்தவேளை பல்கலைகழக மாணவனாக காணப்பட்ட ,பின்னர் ஊடகவியலாளராக மாறிய மஹ்மூட் ரொஸ்டொம் யுத்தம் ஆரம்பித்த முன்னர் முதல்தடவை நிம்மதியாக உறங்கினோம் என தெரிவித்துள்ளார்.

எங்கும் எப்போதும் எந்தநேரத்திலும் குண்டுகள் விழுந்து வெடித்ததால் யுத்தத்தின் போது என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பாக உணர்ந்ததால் நேற்று நான் நிம்மதியாக உறங்கினேன் கடந்த 470 நாட்களில் நேற்றே நான் நிம்மதியாக உறங்கினேன் என தெரிவித்துள்ளார்.

நான் கண்விழித்ததும் எனது அயலில் உள்ளசிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் நான் அதிர்ச்சியடைந்தேன்,யுத்தத்திற்கு முன்னர் போல சிறிய உணவுபண்டங்களை விற்பவர்களை நான் பார்த்தேன் மீண்டும் பிறந்தது போலயிருந்தது என அவர்தெரிவித்துள்ளார்.

அச்சமின்றி பதற்றமின்றி உறக்கத்திலிருந்து கண்விழித்தேன்என்பதை என்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்துள்ள சபா முகமட் என்பவர் என்னால் இதனை நம்பமுடியவில்லை பறவைகளின் சத்தம் இனிமையாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.ஷ

இவர் கான் யூனிசில் முகாமில் வசித்துவருகின்றார், எனது அழகானவீடு முற்றாக அழிந்துவிட்டது,எனினும் நான் அமைதியை மகிழ்ச்சியை அனுபவிப்பேன் என தெரிவித்துள்ள அவர் இன்னமும் துயரத்தி;ற்கும் கவலைக்கும் இடமுள்ளது அது என்றென்றும் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.