Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா?

,

ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை

இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா  பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே  தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்,