Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

லெபனான் மீது தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. மீண்டு வரும் ஹிஸ்புல்லா- அமெரிக்கா அதிருப்தி

.

“லெபனான் சூழல் லெபனானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு போர்க்கள சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவினர் மட்டுமல்லாது குழந்தைகள் பெண்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ளது.

10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கியும் அண்டை நாடான சிரியாவை நோக்கியும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் அவரது மகள் ஜைனபும் கொல்லப்பட்டனர்.

மேலும் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர்கள் 20 பேர் இதுவரை குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளனர்.

தரைவழித் தாக்குதல் இதனால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிஸ்புல்லாவினர் மீண்டு வர அவகாசம் கிடைக்காதபடி இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் நடந்த தாக்குதலில் 109 லெபனானியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இதுவரை வான்வழியாக மட்டுமே தாக்கி வந்த இஸ்ரேல் நேற்று இரவு முதல் லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

கிராமங்கள்

தெற்கு லெபனானில் எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தங்களின் காவற்படைகள் தாக்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதற்கிடையே எல்லையில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் தலைநகர் பெய்ரூட்டில் 6 வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்துள்ளது.

தயார்

இதற்கு மத்தியில் எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசிம் [Naim Qassem] தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மறைவுக்குப் பிறகு அவ்வமைப்பு பொதுவெளியில் தோன்றி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.”,