Breaking News
வடக்கிலிருந்து தமிழ் இளைஞர்ளை கட்சிக்குள் ஈர்க்க பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பு
.
எதிர்காலத்தில் வடக்கிலிருந்து தமிழ் இளைஞர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்ப்பதாக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இப்போதும் தமிழ்ச் சமூகத்திலுள்ள இள வயதினருடன் தனது கட்சி
நெருங்கி செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதில் தமது கட்சி முனைப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டுமென்றும், நாமல் ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டார்.