Breaking News
தமிழ் தேசியத்தின் இருப்பினை பாதுகாக்க தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும்!
தமிழரசுக் கட்சியின் முக்கிய நபரின் சர்வாதிகார போக்கினால் தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் வெளியேற்றப்படுகின்றனர்.

தமிழ் தேசியத்தின் இருப்பினை பாதுகாக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும் அதற்கே எமது ஆதரவு என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்...
நேற்றைய தினம் ஊடகங்கள் முன் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போது எம் தேசத்தில் இருந்து சிங்கள தேசியக் கட்சிகளை விரட்டவேண்டும், குறிப்பாக NPP யை தோற்றடிக்கப்பட வேண்டும், இதற்காக நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் இது, இன்று தமிழரசுக் கட்சி தனிநபரினால் எதேச்சதிகாரமாக செயற்படுத்தப்படுவதனால் எமக்கிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தாது பிரித்தாளும் தந்திரத்தினை கொழும்பில் இருந்து தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த தமிழரசுக் கட்சியின் முக்கிய நபரின் சர்வாதிகார போக்கினால் தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் வெளியேற்றப் படுகின்றனர்/ விலகி செல்கின்றனர். ஆதலினால் தமிழ்தேசியக் கொள்கையில் இருந்து இம்மியளவும் விலகாது ஒற்றுமைக்காக செயற்படும் கஜேந்திரகுமார் அணியினை தமிழ் தேசம் பலப்படுத்த வேண்டிய தேவை இன்று வந்துள்ளது, அந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து எமது பூரண ஆதரவினையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கி எம்மால் ஆன சகல உதவிகளையும் வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.. தமிழ்தேசிய அரசியலிலும் மாற்றத்தின் தேவை உணரப்படுகிறது