Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 73 மாணவர்கள்!

குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 68 மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்ஜனி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மேலும், 5 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவத்தில் ஆசிரியர் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. 

இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

திடீரென ஏற்பட்ட வாந்தி மற்றும் வயற்றுவலி காரணமாக மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு செயற்பாடுகளை முன்னெடுத்தனர். 

இதேவேளை, புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்துவழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார். 

குறித்த உணவகத்தில் அதிகாலை 04 மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் தொடர்பிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். 

குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.