Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சுண்டிக்குளத்தில் தொடரும் நில அளவீடு - நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! - வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவிப்பு!

,

வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினரால் இன்றும் நில  அளவீடு மேற்கொள்ளப்படுகின்றது. இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று  வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். 
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு  இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த ஜீலை மாத ஆரம்பத்திலிருந்து சுண்டிக்குளம் பகுதிகள் அவசர அவசரமாக கடற்படையினரால் கலவரப்பாடுகளும் ஏனைய காணிகளும் நிலஅளவீடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முடிவடைந்து விட்டது என நாங்கள் நினைத்தோம். ஆனால் இன்று (7) காலை 8 மணிக்கும் நிலஅளவீடு மேற்கொள்ளப்படுகின்றது.

தயவுசெய்து வடமராட்சி கிழக்கின் வளத்தையும் நிலத்தையும் காப்பாற்றுவதற்காக வடமராட்சி கிழக்கில் பிரதேசசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

இந்த சமயம் நான் அங்கு இல்லாமல் கொழும்பில் நிற்கின்றேன். இங்கிருந்து வடமராட்சி கிழக்கு மக்கள் சார்பாக இந்தத் தகவலை நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனை மீறியும் கடற்படையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்களாயின் ஜனநாயக உரிமைக்கான எதிர்ப்புப் போராட்டங்களையும் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து காணி உரிமைகளை மீட்பதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.- என்றார்.