Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் கும்பல் கைது!

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் 10 நபர்கள் கைது!

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ 'ஐஸ்' (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.