Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

35 ஆண்டுகளுக்குப் பிறகு பலாலி இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவ அனுமதி

,

யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக சென்று வழிபட இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (27) முதல் அமலுக்கு வந்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தம் காரணமாக பலாலி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர், பலாலி பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் ஆலயம் இருந்த பகுதியும் அடங்கும்.

இராணுவம், ஆறு மாதங்களுக்கு முன்பு சுதந்திரமாக ஆலயத்துக்கு செல்வதற்கான அனுமதியை அறிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் மக்கள் விசேட நாள்களில் மட்டுமே கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஆலயத்திற்கு மாத்திரமாக செல்வதற்கென பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக வழிபாட்டுக்காக மட்டும் மக்கள் சென்று திரும்ப இராணுவ அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,கடந்த வருடம் மார்ச் 22ஆம் திகதி, பலாலி மற்றும் வயாவிளான் பகுதிகளில் உள்ள 234.83 ஏக்கர் விவசாய நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக விடுவித்திருந்தார்.

எனினும், உயர் பாதுகாப்பு வேலிகள் பின்நகர்த்தப்படாமல் அந்த நிலங்கள் அதே பாதுகாப்பு வலய எல்லைக்குள் காணப்பட்டதால், விவசாயிகள் நேரடியாக பயன்படுத்த முடியாமல், இராணுவ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டபடி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, இராணுவம் இந்த பாதுகாப்பு வேலிகளை பின்நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், விரைவில் விவசாய நிலங்களில் மக்கள் முழுமையாக சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட புதிய கட்டளை தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமார, வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை வியாழக்கிழமை (26) சந்தித்த போதே, இந்த வேலிகளை பின்நகர்த்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5__4___1_.jpeg5__5___1_.jpeg