Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

Uber, PickMe அதிரடி கோரிக்கை

வாரத்திற்கு மில்லியன் கணக்கான பயணங்களை மேற்கொள்ளும் இந்த இரு நிறுவனங்களும், எரிபொருள் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில் மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு அவசியமானது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

இலங்கையின் போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், தமது சாரதிகள் மற்றும் விநியோகப் பங்காளர்களுக்கு அதிக எரிபொருள் ஒதுக்கீடுகளை வழங்குமாறு Uber மற்றும் PickMe நிறுவனங்கள் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் முன்னணி செயலி (App) அடிப்படையிலான தளங்களான இவை, தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

பொதுப் போக்குவரத்து, உணவு விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் இத்தளங்கள் ஆற்றிவரும் பங்களிப்பை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மார்ச் 21 முதல் நாளாந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனங்கள், எனினும் தற்போதைய தேவைகளுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளன.

பயணங்களின் எண்ணிக்கை மற்றும் சாரதிகளின் ஈடுபாட்டைக் கண்காணிப்பதன் மூலம், எரிபொருளைச் சிக்கனமாகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதை இத்தளங்கள் உறுதிப்படுத்துகின்றன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலம், இத்தளங்களை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சாரதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, பொதுமக்களுக்கான இணைப்புச் சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு மில்லியன் கணக்கான பயணங்களை மேற்கொள்ளும் இந்த இரு நிறுவனங்களும், எரிபொருள் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில் அதிகரித்துள்ள கேள்வியை எதிர்கொள்ள மேலதிக எரிபொருள்   ஒதுக்கீடு அவசியமானது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.