Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்.

அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து அவுஸ்திரேலிய  ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn)  உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா  ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர  அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது

மேலும், திருமதி சமந்தா  ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகமவில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன்  முன்னெடுக்கப்படும்  பல திட்டங்களைப் பார்வையிட்டார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை வழியனுப்பும் நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்  கிருஷாந்த அபேசேன மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.