Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் - நா.வேதநாயகன்.

'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது.

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். 

'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus)  இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் - வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன. 

இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். 

இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன், என்றார்.