Breaking News
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!
.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் சஜித் பிமேதாச அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் ”அனைவரும் வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்றும்
இனவெறி, பாகுபாடு இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.