Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது!

அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்தால் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (16) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்துக்கு சேவையாற்றியுள்ளது. ஆகவே 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதை போன்று இந்த முறையும் வெற்றிப்பெறுவோம்.

தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொய் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மாத்திரம் மக்கள் மத்தியில் பிரதான அரசியல் கொள்கையாக மக்கள் மத்தியில் முன்வைத்தது. அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே உள்ளுராட்சிமன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாட்போல் ஜனாதிபதி நடந்துக் கொள்ள வேண்டும்.

யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.