Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முதல்நாள் இரவிலேயே கைதிகளிடமிருந்து மிரட்டல்! காணொளி வெளியாகியது - 3 பேர் அதிரடி கைது.

சர்கோசி சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவே "கொலை மிரட்டல்" !

சிறைக்குச் சென்ற சர்கோசி... முதல்நாள்  இரவிலேயே கைதிகளிடமிருந்து மிரட்டல்! காணொளி வெளியாகியது  - 3 பேர் அதிரடி கைது.

பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, லிபிய நிதி முறைகேடு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பாரிஸில் உள்ள புகழ்பெற்ற 'லா சாண்டே' சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிறைக்குச் சென்ற முதல் இரவே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அரங்கேறியுள்ளது.

சர்கோசி சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவே, சக கைதிகள் சிலர் அவருக்கு எதிராகக் கூச்சலிடுவதும், கடுமையான மிரட்டல்களை விடுப்பதும் போன்ற ஒரு காணொளி  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோ, சிறைக்கு உள்ளேயே ஒரு கைதியால் திறன்பேசி  மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளிவெளியானதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகமும், பாரிஸ் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக "கொலை மிரட்டல்" விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது .
காணொளியில்  இடம்பெற்ற மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மூன்று கைதிகள் உடனடியாககாவல்துறை காவலில் (garde à vue) வைக்கப்பட்டனர்.  சம்பந்தப்பட்ட கைதிகளின் அறையில் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிறையில் தடைசெய்யப்பட்ட இரண்டு திறன்பேசிகள் (மொபைல் போன்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, சிறைக்குச் சென்ற முதல் நாளிலேயே சக கைதிகளால் மிரட்டப்பட்ட சம்பவம், பிரான்ஸ் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்கோசியின் கடும் அரசியல் போட்டியாளராகக் கருதப்படும் மரின் லு பென் (Marine Le Pen), இந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், "இந்தச் சூழலைக் கண்டு சிலர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், என்னைப் போலவே கோடிக்கணக்கான பிரான்ஸ் மக்களும் இதைக் கண்டு 'அருவருப்பு' (dégoût) அடைந்திருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் அவர்களும், சிறையில் சர்கோசியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். லிபிய வழக்கில் சர்கோசி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், சிறையில் அவரது பாதுகாப்பு தற்போது பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.