Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும்

,

கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, அவற்றின் இருப்பிடம் மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அவை எந்த நோக்கத்திற்கு ஏற்றவை என்பதை அரசாங்கம் மிக விரைவில் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, பொது நிர்வாக அமைச்சகம் அறிக்கைகளைக் கோரியுள்ளது.

ஹோமகமவில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை இராஜதந்திர சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பெரஹெரா சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எனவே, அந்த இரண்டை மட்டுமே அவர் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் பிற சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.