Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நினைவேந்தலும்!

கல்குடாவில் முள்ளிவாய்க்காய் கஞ்சி வழங்கி வைப்பு.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா திருநாவற்குளம் 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. போர்க்காலத்தின் கொடூரமான வலிகளையும் பட்டினியால் மக்கள் துடித்த அந்தத் தியாக வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நிகழ்வின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இந்தக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உணர்வெழுச்சி மிக்க நிகழ்வில் மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

கல்குடாவில் முள்ளிவாய்க்காய் கஞ்சி
முள்ளிவாய்க்கால் நினைவு வாராத்தின் ஆரம்ப நாளாகிய நேற்று (12.05.2026) பிற்பகல்  மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காய் கஞ்சி காய்சி வழங்கப்பட்டது.  முதலில் கறுவாக்கேணி முச்சந்தி பிள்ளையாருக்கு பூஜைநடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இந்த முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் சைவக்குருமார், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.