Breaking News
நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக்கொலை
.
நைஜீரியாவில், திங்கட்கிழமை (13) இரவு, ஆயுதமேந்திய கும்பல்களால் 40 விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், ஆயுதமேந்திய கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள், மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
இவர்கள், விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயற்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள், திங்கட்கிழமை (13) இரவு, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து, அங்குள்ள விவசாயி்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.