Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் - அநுர அரசிடம் ராகுல தேரர் இடித்துரைப்பு

.

வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது. இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.

இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் சிறு பிரச்சினை இருப்பதாக உணரமுடிகின்றது. அங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை வழங்கவும்.  இலங்கை என்பது சுயாதீன நாடு. நாம் இந்தியாவின் கைப்பாவையாகவும் மாறக்கூடாது. வெளிநாட்டுத் தொடர்புகள் அவசியம். அதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதாக மாற்ற வேண்டும்.

வெளிநாட்டுத் தூதரக சேவைகளில் உள்ளவர்கள் மாற்றப்பட வேண்டும். சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்களை நியமிக்க வேண்டும்.” – என்றார்.