Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தேய்ந்து போகும் தங்கப்பதக்கம் ! - 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை திருப்பி தரும் மனு பாக்கர்..!

.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற இரண்டு வெண்கலப் பதக்கங்களை மனு பாக்கர் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் திருப்பியளிக்கவுள்ளார்.  

 இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்ற இரு பதக்கங்களை சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் திருப்பியளிக்கவுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். அண்மையில் இவர் தான் பெற்ற பதக்கங்கள் சேதமடைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், உலகெங்கிலும் உள்ள பல விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் வென்ற பதக்கங்கள் தேய்ந்து போவதாகவும், பதக்கங்களின் மையத்தில் பதிக்கப்பட்ட இரும்புத் துண்டுகள் உதிர்ந்து போவதாகவும் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச ஒலிம்பிக் குழு சேதமடைந்த பதக்கங்களை திரும்ப பெற முடிவெடுத்துள்ளது. மேலும், அதற்கு மாற்று பதக்கங்களை தருவதாகவும் கூறியிருந்தது. அந்த வரிசையில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது இரு பதக்கங்களை திருப்பி தர முன் வந்துள்ளார். அதை பெற்றுக்கொள்ளவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு மாற்று இரு வெண்கலப் பதக்கங்களை அவருக்கு தர வாய்ப்புள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பதக்கங்கள் பிரபல வாட்ச் நிறுவனமான LVMH குழுமத்தின் சௌமெட் (Chaumet) நிறுவனம் வடிவமைத்து வருகிறது. பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான மொன்னை டி பாரிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் அந்நாட்டின் நாணயங்களையும் அச்சிட்டு வருகிறது. தற்போது சேதமடைந்த பதக்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் பெற்றபட்டு மொன்னை டி பாரிஸ் மூலம் மாற்றப்பட்டு அசல் பதக்கங்களாக மீண்டும் பொறிக்கப்பட்டு உரிய வீரர், வீராங்கனைகளிடம் ஒப்படைக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 5,084 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுற்றில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றார். பின்னர் 22 வயதான சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.