Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம்: கனடா எச்சரிக்கை

.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா பிரீமியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று கூறியிருக்கிறார்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படுமானால், அது கனடாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்.

இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford எச்சரித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 1.5 மில்லியன் வீடுகளுக்கு கனடா மின்சாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், மிச்சிகன், மின்னசோட்டா மற்றும் நியூயார்க்குக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு கனடா ஆகும்.

மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக வாஷிங்டன் டிசிக்கு சென்றிருந்த ஒன்ராறியோ பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான Vic Fedeli, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 60 சதவிகிதம் கனடாவிலிருந்துதான் வருகிறது.

ஆக, நீங்கள் இறக்குமதி செய்யும் 60 சதவிகித எண்ணெய்க்கும் 25 சதவிகித வரி விதித்தால், உங்கள் பெட்ரோல் விலை எங்கேயோ போய்விடும் என்று கூறியுள்ளார்.ஆக, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவிகித வரி விதிக்குமானால், அதை எதிர்கொள்ள கனடா தயாராகிவருவதாகவே தெரிகிறது.