Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா பொறுப்பேற்பு!

.

புதிய அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுபேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான இவர், கடந்த பொதுத்தேர்களில், 

போட்டியிட்டு, 38368 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

இந்த மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற இவர், தேசிய மக்கள் சக்தி மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை கைப்பற்றுவதற்கு கட்சியை தலைமை தாங்கி வழி நடாத்தியவராவார்.

இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், புதிய அரசாங்கத்தின் புதிய ஆண்டுக்கான மாவட்டத்துக்கான, முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் 

ரத்னசேகர மற்றும் மாவட்ட அரச திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.