Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலர் சுசீர் பாலாஜி மரணம்-எலான் மஸ்க் உள்ளிட்டோர் இரங்கல்

.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான சுசீர் பாலாஜி மரணம் அடைந்துள்ளார். ஓப்பன்ஏஐ என்பது அமெரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான சுசீர் பாலாஜி மரணம் அடைந்துள்ளார். ஓப்பன்ஏஐ என்பது அமெரிக்க காப்பிரைட் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது இளைஞரான சுசீர் பாலாஜி, செயற்கை நுண்ணறிவு பெருநிறுவனமான ஓப்பன்ஏஐயில் பணியாற்றியவர். சான்பிரான்சிஸ்கோவின் புக்கானன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ காவல்துறை அலுவலகம், தலைமை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை சுசீர் பாலாஜியின் மரணத்தை உறுதிசெய்துள்ளதாக மெர்குரி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து ஆய்வு செய்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதகங்கள் அதிகம் என வெளிப்படையாக கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வந்ததால் சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலராக அறியப்படுகிறார். இவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் காப்பிரைட் சட்டத்தை மீறியதாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.