Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மனோ கணேசனுக்கு எதிராக போராட்டம்

.

மனோ கணேசனுக்கு எதிராக போராட்டம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் ஞாயிற்று கிழமை காலை போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மனித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை நகரில் விநாயகர் ஆலயத்திற்கு முன் காலை 10 மணிக்கும் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை நகரத்தில் காலை 10 மணிக்கும், கேகாலை தெஹியோவிட்ட நகரில் காலை 10 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும், மனோகணேஷன் எம்.பிக்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

  1. Kotagala – Vinayagar Kovil at 10:00am
  2. Bogawanthalawa – Town at 02:00pm
  3. Ratnapaura – Khawatha Town at 10:00am
  4. Kegalla – Dehiowita,chinnakuriyana
  5. Badulla –