Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணி

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னாலை – பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வசாவிளான் கிழக்கு(ஜே/244), வசாவிளான் மேற்கு(ஜே/245), பலாலி வடக்கு(ஜே/254), பலாலி கிழக்கு(ஜே/253), பலாலி தெற்கு(ஜே/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது.

இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஏனைய மக்களும் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி, துப்பரவு பணிகளை ஆரம்பிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டப்படுகின்றனர்.