பொதுவேட்பாளர் பிரசாரகர்களும், தமிழ் மக்கள் கூட்டணியினரும் நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.
பொதுவேட்பாளரை தமிழ் அரசு கட்சி போன்ற கட்சிகள் ஆதரிக்காமல் விடுவதை பற்றி நாங்கள் கவனம்கொள்ளவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரிக்காமல் விட்டாலும், அந்த கட்சி உறுப்பினர்கள் பொது வேட்பாளரையே ஆதரிப்பார்கள்!
பொதுவேட்பாளர் பிரசாரகர்களும், தமிழ் மக்கள் கூட்டணியினரும் நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.
இது தொடர்பில் தமிழ்பக்கத்திடம் பேசிய க.வி.விக்னேஸ்வரன்- “ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாமென நாங்கள் பேசினோம். பொதுவேட்பாளரை மையமாக வைத்து தமிழ் கட்சிகள், மக்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவது பற்றி பேசினோம். மக்கள் நோக்கில் நிறுவனரீதியாக செயற்படும் அமைப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
பொதுவேட்பாளரை தமிழ் அரசு கட்சி போன்ற கட்சிகள் ஆதரிக்காமல் விடுவதை பற்றி நாங்கள் கவனம்கொள்ளவில்லை. கட்சிரீதியாக என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது எங்களை பாதிக்காது. கட்சி வேறு நிலைப்பாட்டை எடுக்கலாம், கட்சியிலுள்ளவர்கள் வேறு மாதிரி வேலை செய்யலாம். பொதுமக்கள் சார்பில் சிவில் சமூகம் முன்னெடுக்கும்
நடவடிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம். அது தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பதால், அதற்கு முதலிடம் கொடுக்கிறோம்“ என்றார்.
இதேவேளை, நேற்று முன்தினம் மாலை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனையும் சந்தித்து பேசினர். அவரும் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார்.