Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது

.

கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், டொராண்டோ நகரைச் சேர்ந்த அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்