Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விரைவில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறக்கப்படும் !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விரைவில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறக்கப்படும் !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா விஜயம் மேற்கொண்டிருந்த போதே வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை இந்திய தூதுவர் பார்வையிட்டார்.

இலங்கை-இந்திய உறவு திட்டத்தின் கீழ் சுமார் 280மில்லியன் ரூபாய் செலவில் இந்த சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை பார்வையிட்ட தூதுவர் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பின்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி நிர்மாணிப்பின் நிலைமை தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தூதுவர் அங்கு தேவையாகவுள்ள மேலதிக தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி,பிரதி பணிப்பாளர்,சிரேஸ்ட சித்தர சிகிச்சை நிபுணர் ஜீப்ரா,சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.