Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தெற்கு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல்

.

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று பரவலாக பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்குகளானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

இதில் சஜித் பிரேமதாசா ஆயிரம் விகாரைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாகத் தான் இருக்கும்.

அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே, ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக, ஒரு இனத்தின் விடுதலையாக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும்.

அதே போல் அனுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்றி அதிகாரம் கொண்ட அந்த கதிரையை பிடிப்பதற்காகவும் இல்லை.

ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கு ஏன் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் அந்தத் தகவலை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

எங்களுடைய வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.

அடுத்த 13 நாட்களுக்கு பல போலியான செய்திகள் என்னை பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியனேத்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம். ஆனால் நான் எந்த விதமான மாற்றத்திற்கும் உட்பட போவதில்லை.
ஆகவே நீங்கள் சங்குக்கு போடுகின்ற புள்ளடியானது எமது இனத்திற்கான புள்ளடி எமது விடுதலைக்கான புள்ளடி எமது மண் மீட்புக்கான புள்ளடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றார்.